பணத்திற்காகவே இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தனர்: துணைத்தூதர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் பாபுஷ்கின் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த பிரச்னையில் நாங்களும் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகிறோம். விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்படும். இதை அரசியலாக்க வேண்டாம். இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இடம் பெற வேண்டுமென நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை.

பெரும்பாலான இந்தியர்கள் பணத்திற்காக மட்டுமே ரஷ்ய ராணுவத்தில் துணைப்பணியாளர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 50 அல்லது 60 அல்லது 100 ஆக மட்டுமே இருக்கும். இதனால் அவர்களால் எந்த முக்கியத்துவமும் இல்லை. நாங்கள் அவர்களை பணியமர்த்தவும் விரும்பவில்லை. ராணுவத்தில் சேர்ந்த பலருக்கும் இங்கு வேலை செய்வதற்கு தகுந்த விசா கூட இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரிகின்றனர். பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள். இவ்வாறு கூறினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்