பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள்!

டெல்லி: வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிதத்து வருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செட்டில் ஆனவர்கள் அதிக அளவில் பாஸ்போர்ட் ஒப்படைக்கின்றனர். பாஸ்போர்ட்டை ஒப்படைப்பவர்களில் 30 முதல் 45 வயது வரை உள்ளவர்களே அதிகம். வேலை, வாழ்க்கைச் சூழல், உள்கட்டமைப்பு வசதிகளால் கவரப்பட்டு, இந்தியக் குடியுரிமையை அவர்கள் விட்டுக்கொடுக்கின்றனர். டெல்லியை சேர்ந்தவர்கள்தான் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதில் முதலிடம் -2014 முதல் 2022-ம் ஆண்டு வரை 60,414 பேர் பாஸ்போர்ட் ஒப்படைத்துள்ளனர். டெல்லிக்கு அடுத்து பஞ்சாப் (28,117 ), குஜராத் (22,300 பேர்) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர்

Related posts

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

ரேபிடோ புக் செய்து கஞ்சா விற்றவர் கைது

புளியந்தோப்பில் பரபரப்பு; ரவுடியை பீர்பாட்டிலால் தாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது