இந்திய செவிலியர்களுக்கு மன்னர் சார்லஸ் விருந்து

லண்டன்: இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் நேற்று முன் தினம் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இந்தியாவை சேர்ந்த செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர்கள் உள்ளிட்ட சர்வதேச மருத்துவர்களின் சேவையை பாராட்டி லண்டன் பக்கிங்காம் அரண்மனையில் மாலை விருந்து அளித்தார். இங்கிலாந்தில் உள்ள மருத்துவத்துறையினர் தேசிய நல சேவைகள் என்ற அமைப்பின் கீழ் பதிவு பெற்று நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள். அந்த அமைப்பின் கீழ் ஒன்றரை லட்சம் செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாளம், கென்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400 செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர்கள் இங்கிலாந்து மன்னர் அளிக்கும் மாலை விருந்துக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது