இந்திய விமானப்படையில் வேலை: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி

சென்னை: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு 27.06.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வி தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10, +12 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூன்றாண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Instrumentation Technoloy, Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50% மதிப்பெண்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை / மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக COBSE உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ ஆண்களும், 152 செ.மீ பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ.250 ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி மூலமாக பணம் செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், இரண்டாம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவர்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பைப் பார்த்து, தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 044-24615160 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, சென்னை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மெட்ரோ 2ம் கட்ட நிதி: ஒன்றிய அரசு விளக்கம்