இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்மாநிலத் தலைவராக கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.எம்.காதர்மொகிதீனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த கல்விப்புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும்; வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

Related posts

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

லாப நோக்கமின்றி 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்

500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை