இந்தியன் ஆயில் கழகத்தில் 1603 அப்ரன்டிஸ்கள்

பயிற்சி விவரம்:

1. Trade Apprentice:
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:
Data Entry Operator (Skilled), Data Entry Operator (Fresher), Retail Sales Associate (Fresher), Retail Sales Associate (Skilled), Fitter, Electronics Mechanic, Electrician, Instrument Mechanic, Machinist.

தகுதி:
Retail Sales Associate பணிக்கு: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட் பணிக்குரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெறாதவர்களும் ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட் (பிரஷர்) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Data Entry Operator பணிக்கு: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டேட்டா என்ட்ரி பயிற்சியில் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (பிரஷர்) பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
இதர டிரேடுகளுக்கு: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. Technical Apprentice:
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:
Mechanical, Electrical, Instrumentation, Civil, Electronics, Electrical & Electronics. தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி.
3. Graduate Apprentice: தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பட்டப்டிப்பை முடித்திருக்க வேண்டும். வயது: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 30.11.2023 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படும்.

உதவித் தொகை: இந்தியன் ஆயில் கழகம் விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் Trade Apprentice பயிற்சிக்கு www.apprenticeshipindia.org என்ற இணையதளம், Technician Apprentice மற்றும் Graduate Apprentice பயிற்சிகளுக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Related posts

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்