இந்திய கடற்படையில் 250 ஆபீசர் பணியிடங்கள்

பணி: Short Service Commission Officer.
மொத்த இடங்கள்: 250.

பணியிடங்கள் விவரம்:

A. Executive Branch

a) Gemeral Service (GS (x)/Hydro Cadre: 56 இடங்கள். ஆண்கள்-39, பெண்கள்-17. வயது: 2000 ஜூலை 2க்கும், 2006 ஜன.1க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
b) Pilot: 24 இடங்கள். ஆண்கள்- 17, பெண்கள்-7. வயது: 2001 ஜூலை 2ம் தேதிக்கும், 2006 ஜூலை 1ம் தேதிக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.
c) Naval Air Operations Officer (Air Crew): 21 இடங்கள். ஆண்கள்-15. பெண்கள்-6. வயது: 2001 ஜூலை 2ம் தேதிக்கும், 2006 ஜூலை 1ம் தேதிக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.
d) Air Traffic Controller: 20 இடங்கள். ஆண்கள்-10. பெண்கள்-10. வயது: 2000ம் ஆண்டு ஜூலை 2ம் தேதிக்கும், 2004 ஜூலை 1ம் தேதிக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் ஒட்டு மொத்தமாக 60% மதிப்பெண்களை பெற்றிருப்பதோடு, 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

e) Logistics: 20 இடங்கள். ஆண்கள்: 14, பெண்கள்:6. வயது: 2000 ஜூலை 2ம் தேதிக்கும், 2006ம் ஆண்டு ஜன.1ம் தேதிக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., அல்லது 60% தேர்ச்சியுடன் எம்பிஏ அல்லது 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி/பி.காம்/ ஐடி பாடத்தில் பிஎஸ்சி மற்றும் நிதி/லாஜிஸ்டிக்ஸ்/சப்ளை செயின் மேனேஜ்மென்ட்/ மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

f) Naval Armament Inspection Cadre : 16 இடங்கள் (ஆண்கள்-8, பெண்கள்-8). வயது: 2000 ஜூலை 2ம் தேதிக்கும் 2006 ஜன.1ம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: மெக்கானிக்கல்/ மெக்கானிக்கலுடன் ஆட்டோமேஷன்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ்/மைக்ரோ எலக்ட்ரோனிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ கன்ட்ரோல் இன்ஜினியரிங்/புரடக்‌ஷன்/ இன்டஸ்ட்ரியல் புரடக்‌ஷன்/இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ கமப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்/ மெட்டலர்ஜி/ மெட்டலர்ஜிக்கல்/கெமிக்கல்/ மெட்டீரியல் சயின்ஸ்/ஏரோ ஸ்பேஸ்/ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம். (விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் ஒட்டு மொத்தமாக 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பதோடு, 10ம் வகுப்பிலும், பிளஸ் 2 விலும் ஆங்கிலத்தில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.).

B. Education Branch:

g. Education: 7 இடங்கள் (ஆண்கள்-4, பெண்கள்-3). வயது: 2000 2 ஜூலைக்கும், 2004ம் ஆண்டு ஜூலை 1க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: 60% மதிப்பெண்களுடன் கணிதம்/ ஆபரேஷனல் ரிசர்ச் ஆகிய ப ாடங்களில் எம்எஸ்சி. (பிஎஸ்சியில் ஒரு பாடமாக இயற்பியல் படித்திருக்க வேண்டும்) அல்லது 60% மதிப்பெண்களுடன் இயற்பியல்/பயன்பாட்டு இயற்பியலில் எம்எஸ்சி (பிஎஸ்சியில் ஒரு பாடமாக கணிதம் படித்திருக்க வேண்டும்) அல்லது 60% மதிப்பெண்களுடன் வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி ( பிஎஸ்சியில் ஒரு பாடமாக இயற்பியல் படித்திருக்க வேண்டும்).
Engineering: 8 இடங்கள் (ஆண்கள்-4, பெண்கள்-4). வயது: 2000 ஜூலை 2ம் தேதிக்கும், 2004 ஜூலை 1ம் தேதிக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: 60% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,
எம்.டெக்: வயது: 2 ஜூலை 1998க்கும், 2004 ஜூலை 1க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: தெர்மல்/புரடக்‌ஷன் இன்ஜினியரிங்/ மிஷின் டிசைன்/ கம்யூனிகேசன் சிஸ்டம் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/விஎல்எஸ்ஐ/ பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் பாடத்தில் எம்.டெக்.,

C. Technical Branch:

h) Engineering Branch (General Service): 36 இடங்கள் ( ஆண்கள்-25, பெண்கள்-11). வயது: 2000 ஜூலை 2க்கும், 2006 ஜன.1க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: மெக்கானிக்கல்/மெக்கானிக்கலுடன் ஆட்டோமேஷன்/மரைன்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ புரடக்‌ஷன்/ஏரோநாட்டிக்கல்/ இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்/கன்ட்ரோல் இன்ஜினியரிங்/ஏரோ ஸ்பேஸ்/ ஆட்டோமொபைல்ஸ்/ மெட்டலர்ஜி/மெக்காடிரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
j) Electrical Branch (General Service): 42 இடங்கள் (ஆண்கள்-29, பெண்கள்-13). வயது: 2 ஜூலை 2000 க்கும், 2006 ஜன.1க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/டெலி கம்யூனிகேசன்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ பவர் இன்ஜினியரிங்/ பவர் எலக்ட்ரானிக்் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
இந்திய கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகிவயற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்நதெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம்/ ஜெனரல் சயின்ஸ்/ரீசனிங் ஏபிலிட்டி/கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து ஆப்ஜக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கேரளா, எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் பயிற்சி வழங்கப்படும். பின்னர் இந்திய கடற்படையில் நிரந்தர பணி வழங்கப்படும். NAIC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், இதர பிரிவிற்கு 2 ஆண்டுகளும் பயிற்சி வழங்கப்படும். 2025 ஜூனில் பயிற்சி தொடங்கும்.பயிற்சியின் போது உதவித் தொகையும், பயிற்சிக்கு பின் இந்திய கடற்படையில் சப்-லெப்டினென்ட் பணியும், மாதம் ₹50 ஆயிரமும் வழங்கப்படும்.

www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.09.2024.

Related posts

பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பு!!

சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்