இந்திய கடலோர காவல் படையில் 320 இடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் 260 நேவிக்குகளும், 60 யான்ட்ரிக்குகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

1. நேவிக் (ஜெனரல் டியூட்டி): 260 இடங்கள் (பொது- 102, பொருளாதார பிற்பட்டோர்-25, ஒபிசி-82, எஸ்சி-41, எஸ்டி-10). தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.
2. யான்ட்ரிக்: 60 இடங்கள்.
i) யான்ட்ரிக்: (மெக்கானிக்கல்): 33 இடங்கள் (பொது-16, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-6).
ii) யான்ட்ரிக்: (எலக்ட்ரிக்கல்): 18 இடங்கள் (பொது-11, ஒபிசி-4, எஸ்சி-3)
iii) யான்ட்ரிக் (எலக்ட்ரானிக்ஸ்); 9 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்டி-1)

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் 2 அல்லது 3 ஆண்டு டிப்ளமோ.
வயது: 18 முதல் 22க்குள். (அதாவது 01.03.2003க்கும் 28.2.2007க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.) (இரு தேதிகள் உள்பட). எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://joinindiancoastguard.cdac.in/cgept என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (03.07.2024).

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை