இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது: சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சுதந்திர தின உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். இந்த உன்னதமான நாளில் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளுக்கும் வணக்கம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

இது அவரது 11-வது சுதந்திர தின உரை ஆகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். இந்த உன்னதமான நாளில் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளுக்கும் வணக்கம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். மேலும் அவர் பேசியதாவது; ‘பிர்சா முண்டா தொடங்கி பல பழங்குடியின தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்டுள்ளனர். மற்ற பண்டிகைகளைப் போல சுதந்திர தினம், குடியரசு தினத்தை நாம் பண்டிகையாக கொண்டாடுகிறோம். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. மக்கள் உற்சாகத்துடன் மூவர்ண கொடியை கைகளில் ஏந்தி பெருமிதத்துடன் இருக்கின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து நாடு பிரிக்கப்பட்டபோது லட்சக்கணக்கானவர்கள் துயரத்தை அனுபவித்தனர். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்னிக்கை கணிசமாக குறைந்துள்ளது எனவும் அவர் பேசியுள்ளார்.

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்