அரபிக் கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து : தீயை அணைக்க போராடிய 3 இந்திய கடலோர காவல் படை கப்பல்கள்!!

பனாமா நாட்டு சரக்கு கப்பல் ‘மார்ஸ்க் ஃபிராங்க்பர்ட்’. கர்நாடகாவின் கர்வார் பகுதியில் இருந்து 17 மைல் தொலைவில், அரபிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலின் முன்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் சாசெட், சுஜீத் மற்றும் சாம்ராட் ஆகியவை அனுப்பப்பட்டன. இந்த கப்பல்கள் விரைந்து சென்று சரக்கு கப்பலில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் கப்பலின் முன்பகுதியில் பற்றிய தீ அணைந்தது.

Related posts

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்!!

ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து -லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!