விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை

AGNIVEER VAYU INTAKE 01/2025.
வயது: 02.01.2004க்கும் 02.07.2007க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கர்நாடிக்/ இந்துஸ்தானி இசைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆட்சேர்ப்பின் போது இசைப்பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இசைப் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள், இசைக் கச்சேரிகளில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, இசைத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 வருடங்கள் இந்திய விமானப்படையில் இசைக் கலைஞர்களாக பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

பணிக்காலத்தில் வழங்கப்படும் சம்பளம்:முதல் வருடம்- ரூ.30 ஆயிரம், 2ம் வருடம் ரூ.33 ஆயிரம், 3ம் வருடம் ரூ. 36,500, 4ம் வருடம் ரூ.40,000.

இசை தகுதித் திறன் தேர்வில் கீழே குறிப்பிடப்படும் இசைக் கருவிகளில் ஏதேனும் ஒன்றை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
i) Concert Flute/Piccolo,Key Board/Organ/Piano
ii) Oboe; Guitar (Acoustic/Lead/Bass)
iii) Clarinet in Eb/Bb; Violin Viola, String Bass
iv) Saxaphone in Eb/Bb; Percussion/Drums (Acoustic/Electronic)
v) French Horn in F/Bb, All indian Classical Instruments
vi) Trumpet in Eb/C/Bb
vii) Trombone in Bb/G
viii) Baritone
ix) Euphonium
x) Bass/Tuba in Eb/Bb

கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்தபட்சம் 162 செ.மீ., உயரம், நல்ல தெளிவான பார்வைத்திறன் மற்றும் விமானப் படை வீரர்களுக்கு உரிய உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.

கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.

www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதிக்குள் முன்பதிவு செய்து விட்டு, ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதியில் தேவையான அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறும் இடம்: கான்பூர், பெங்களூரு.

தேதி: 03.07.2024 முதல் 12.07.2024 வரை.

 

Related posts

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு