ஏசிசி ‘எமர்ஜிங்’ கோப்பை பைனலில் இந்தியா ஏ

கொழும்பு: வளர்ந்து வரும் அணிகளுக்கான ஏசிசி ஆண்கள் ‘எமர்ஜிங்’ கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலுக்கு இந்தியா ஏ அணி முன்னேறியது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதுகின்றன. பிரேமதாசா அரங்கில் நேற்று நடந்த 2வது அரையிறுதியில் வங்கதேசம் ஏ அணியுடன் மோதிய இந்தியா ஏ அணி 49.1 ஓவரில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சாய் சுதர்சன் 21, அபிஷேக் 34, கேப்டன் யஷ் துல் 66, மானவ் சுதர் 21, ராஜ்வர்தன் 15 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் ஏ அணி 34.2 ஓவரில் 160 ரன்னுக்கு சுருண்டது.

முகமது நயிம் 38, டன்ஸிட் ஹசன் 51, கேப்டன் சைப் ஹசன் 22, ஹசன் ஜாய் 20 எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் நிஷாந்த் 5, மானவ் சுதர் 3, டோடியா, அபிஷேக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 51 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணியுடன் மோதிய பாகிஸ்தான் ஏ 60 ரன் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் ஏ 50 ஓவரில் 322 ஆல் அவுட்; இலங்கை ஏ 45.4 ஓவரில் 262 ஆல் அவுட் (அவிஷ்கா பெர்னாண்டோ, சஹான் அராச்சிகே தலா 97 ரன்).

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்