இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு உடற்தகுதியை தயாராக வைத்திருக்க முயற்சிக்கிறேன்: கேன் வில்லியம்சன்

வெல்லிங்டன்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரரும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் செய்ய முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனால் அவர் அக்டோபர் மாதம் இநதியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு உடற்தகுதியை தயாராக வைத்திருக்க முயற்சிக்கிறேன் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு