6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் இன்று இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘5ஜி தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது மட்டுமின்றி, 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கியும் பயணிக்கிறோம். 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது.

நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பத்தை நோக்கி முன்னோக்கி செல்கிறது. 2ஜி-யின் போது நாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து 4ஜி விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் எங்கள் அரசு மீது எந்த கறையும் கூறப்படவில்லை. எனவே 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு