தீவிரமடையும் மோதல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா

டெல்லி: கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசின் ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரியை அந்நாடு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் கனடா மூத்த தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசும் உத்தரவிட்டுள்ளது. ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான ‘விசா’ சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்குமாறு விசா சேவை மையங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்