இந்தியா இலங்கை முன்னேற்றம்

துபாய்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் வங்கதேசத்துடன் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 12 புள்ளிகளை பெற்றதுடன் வெற்றி விகிதத்தை 71.67% ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அணி அடுத்த ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாகி உள்ளது. ஆஸ்திரேலியா 62.50% உடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி (50.00%) 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 2023-25 டெஸ்ட் சீசன் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். பாகிஸ்தானை 2-0 என ஒயிட்வாஷ் செய்ததால் 4வது இடத்துக்கு முன்னேறிய வங்கதேசம், சென்னை டெஸ்டில் அடைந்த படுதோல்வியால் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்
ரேங்க் அணி போட்டி வெற்றி டிரா தோல்வி புள்ளி வெற்றி%
1 இந்தியா 10 7 1 2 86 71.67
2 ஆஸ்திரேலியா 12 8 1 3 90 62.50
3 இலங்கை 8 4 0 4 48 50.00
4 நியூசிலாந்து 7 3 0 4 36 42.86
5 இங்கிலாந்து 16 8 1 7 81 42.19
6 வங்கதேசம் 7 3 0 4 33 39.29
7 தென் ஆப்ரிக்கா 6 2 1 3 28 38.89
8 பாகிஸ்தான் 7 2 0 5 16 19.05
9 வெஸ்ட் இண்டீஸ் 9 1 2 6 20 18.52

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது