இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை கெடுக்கும் வரலாற்றை கொண்டது ஆர்எஸ்எஸ்: ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: மாநிலங்களவையில் சமாஜ்வாடி எம்பி ராம்ஜிலால் சுமன், என்டிஏவை ஆர்எஸ்எஸ்சுடன் தொடர்பு படுத்தி பேசினார். உடனே குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்,ராம்ஜிலாலின் கருத்துகள் அவை குறிப்பில் இடம் பெறாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கெடுப்பதற்கான முழு உரிமையும் ஆர்எஸ்எஸ்க்கு உள்ளது. நாட்டுக்காக தன்னலமற்ற வகையில் பணியாற்றிய தலைவர்கள் அதில் இருந்தனர் என்று கூறி எம்பியின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த நிலையில்,காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டிவிட்டரில் பதிவில், ‘‘நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை கெடுக்கும் நீண்ட கால வரலாற்றை கொண்டது ஆர்எஸ்எஸ். அமைப்பின் வன்முறை, அரசியல் சட்டம் மற்றும் தேசத்திற்கு எதிரான செயல்களை குறித்த ஆவணங்களை பார்த்து அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக சர்தார் படேல் அதிர்ச்சியடைந்தார். கடந்த 1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி,சர்தார் படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் மீது தடை விதித்தது.

அதே ஆண்டில் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு படேல் கடிதம் எழுதினார். அதில், மகாத்மா காந்தியை கொல்லும் சதி திட்டத்தில் இந்து மகாசபாவுக்கு தொடர்பு இருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை.ஆர்எஸ்எஸ்சின் நடவடிக்கைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்