‘இந்தியா’ சுயநலக் கூட்டணி: பாஜ விமர்சனம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தோல்வியடைய செய்வதற்காக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இதன் 2வது கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணியை பாஜ விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘2024 மக்களவை தேர்தலில் பாஜவின் சந்திரயான் வெற்றிகரமாக மூன்றாவது முறையாக தரையிறங்கும். இது வளர்ச்சியால் நிரப்பப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் பொதுவான குறைந்தபட்ச திட்டம் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக ஊழலின் அதிகபட்ச லாபம் பற்றி விவாதிக்கப்படும். ஏனெனில் இந்த கட்சிகள் அனைத்தும் சேர்ந்து சுமார் ரூ.20லட்சம் கோடி மதிப்பிலான ஊழலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது சுயநலக்கூட்டணியாகும்” என்றார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்