பாரா ஒலிம்பிக் நிறைவு விழா: பதக்க வேட்டையில் இந்தியா சாதனை


பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி, இன்று இரவு வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவு பெறுகிறது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடந்த பாரிஸ் நகரில் பாரா ஒலிம்பிக் போட்டி ஆக.28ம் தேதி தொடங்கியது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,456 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்கினர். அதில் 6 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். நடப்பு தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா பதக்கங்ளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 20ஐ தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) வென்று முதல் முறையாக இரட்டை இலக்கத்தை தொட்டு அசத்தியது. அதையும் தாண்டி இந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதல் 3 இடங்களை சீனா, பிரிட்டன், அமெரிக்கா பிடித்துள்ளன. இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நிறைவு விழா அணிவகுப்பு, கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்திய குழுவினருக்கு ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), பிரீத்தி பால் (தடகளம்) தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க உள்ளனர்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.