இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கோயிலில் 75 ஆண்டுக்கு பின் தீபாவளி வழிபாடு

காஷ்மீர்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கோயிலில் 75 ஆண்டுக்கு பின் தீபாவளி வழிபாடு நடந்ததால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டிட்வாலில் சாரதா கோயில் அமைந்துள்ளது. இந்த பழங்குடியினர் கோயிலானது இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்நிலையில் நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த கோயிலில் நேற்று தீபாவளியன்று சிறப்பு பூஜை நடந்தது. ​​ஏராளமான உள்ளூர் மக்களும், திரிபோனி கிராமத்தைச் சேர்ந்த சீக்கியர்களும் பங்கேற்றனர்.

ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பூஜை முடிந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து வானத்தை ஒளிரச் செய்தனர். முன்னதாக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இங்கு கோயிலும், குருத்வாராவும் இருந்தன. அப்போது அதாவது 1947ம் ஆண்டு வரை தீபாவளி கொண்டாடப்பட்டது. நாடு பிரிவினை ஆன பின்னர், பழங்குடியினர் கோயில் மற்றும் குருத்வாராவை எரித்தனர். அதன் பிறகு அங்கு தீபாவளி கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்போது சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை