பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா: சுனில் ஹாட்ரிக் அசத்தல்

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. கேப்டன் சுனில் செட்ரி ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார். ஸ்ரீ கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு கேப்டன் சுனில் செட்ரி 10வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

15வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பிலும் அவர் கோல் அடிக்க இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. 74வது நிமிடத்தில் மீண்டும் கோல் போட்ட சுனில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். 81வது நிமிடத்தில் மாற்று வீரர் உதாந்தா கோல் அடிக்க, இந்தியா ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. பாகிஸ்தானுடன் சமீபத்தில் மோதிய 6 ஆட்டங்களில் இந்தியா 5வது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவகல்லூரி பெண் பணியாளர்களை பேருந்தில் ஏற்றாமல் அவமரியாதையாக பேசிய நடத்துனர் பணியிட மாற்றம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 500 தொட்டிகளில் சைக்ளோன் மலர்கள் உற்பத்தி: 2வது சீசனுக்கான பணி தீவிரம்

செங்கை எஸ்ஐ எனக்கூறி திருடிய இளம்பெண் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு