இந்தியாவுடன் ஒருநாள் தொடர் இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு: இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரில் விளையாடிய இந்தியா, அனுபவ வீரர் ரோகித் தலைமையில் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது. ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7 தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த நிலையில், ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சரித் அசலங்கா தலைமையிலான அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷன் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அகிலா தனஞ்ஜெயா, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிராணா, அசிதா பெர்னாண்டோ.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்