இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு

பெரம்பூர்: இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று தி.க. தலைவர் வீரமணி பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக.நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ‘’வற்றாத தமிழாறு மகத்தான வரலாறு’’ என்னும் தலைப்பில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில், ஓட்டேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தி.க. தலைவர் கி.வீரமணி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், அருஞ்சொல் இதழின் ஆசிரியர் சமஸ், பேராசிரியர் முனைவர் பர்வின் சுல்தானா ஆகியோர் கலந்துகொண்டு, ‘’கலைஞரின் அரசியல், கலை, பொதுப்பணி ஆகியவற்றில் அவரின் ஆளுமைகள், செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.இதில், கி.வீரமணி பேசியதாவது;

தமிழ் மொழியை உலக அரங்கில் உலக மொழிகளுக்கு இணையான செம்மொழி என்ற பெருமையை கிடைக்க செய்தவர் கலைஞர். நெருக்கடி காலத்தில் எங்கள் மீது விழுந்த அடிகள் ஏராளம். அந்த அடிகளை பெற்று, இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக நம் முதலமைச்சர் இருக்கிறார். இந்தியாவுக்கே சவால் விடும் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். இங்கு ஒருவர்தான் ஒரு பணியாளன் என்று சொன்னவர். இப்போது தான் ஓரு அவதாரம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். அந்த அவதாரத்தை நாம் தான் காக்க வேண்டி உள்ளது.

இப்படியான அவதாரங்களின் கோயிலை காக்க வேண்டியது துறை நாம் அமைச்சரிடம் தான் உள்ளது.கலைஞர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் தனது ஆளுமையை நிலைநட்டியவர். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு பெற்று தந்தது கலைஞர். இப்போது சூரியனின் வெப்பம் அதிகமாக உள்ளது. 4ம் தேதி பிறகு தான் சூரியனின் வெப்பம் தணியும். இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, சட்டத்துறை துணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மண்டல குழு தலைவர் சரிதா, செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு