இந்திய ராணுவத்தில் வழக்கறிஞர் பணி

பணி: JAG Entry Scheme (34th Law Graduates Course).
காலியிடங்கள்: ஆண்கள்-5, பெண்கள்-5.
வயது: 01.01. 2025 தேதியின்படி 21 முதல் 27க்குள்.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்்பிற்கான (எல்எல்எம்)-கிளாட்- 2024 நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப் பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் CLAT நுழைவுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
SSB யால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூர், போபால், அகமதாபாத் ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும். பின்னர் 6 மாத காலம் இந்திய ராணுவ சட்டப்பிரிவில் பயிற்சி வழங்கப்படும். இப் பயிற்சி ஏப்.25ல் தொடங்கும். பின்னர் ராணுவ வழக்கறிஞராக தற்காலிகமாக பணியமர்த்தப்படுவர். அதன்பின் விண்ணப்பதாரரின் திறமையின் அடிப்படையில் நிரந்தர பணி வழங்கப்படும்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2024.

Related posts

பெரியாரின் 146வது பிறந்தநாள்: வைகோ, முத்தரசன் மரியாதை

தேவதானப்பட்டி பகுதியில் மானிய விலையில் மாட்டுத்தீவனங்கள் வழங்க வேண்டும்

“3ஆம் பாலினத்தவர் என விண்ணப்பத்தை நிராகரிக்காதீர்” : ஐகோர்ட்