இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது : அமித்ஷாவிற்கு எம்.பி.சு.வெங்கடேசன் பதிலடி

சென்னை : இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது என்று மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அலுவல் மொழிகளுக்கான 38வது நாடாளுமன்றக் குழு கூட்டம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் அலுவல் மொழிக்கான 12வது அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பேசிய அமித்ஷா, இந்தியை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்றார். மேலும் எந்த ஒரு மாநிலத்தின் மொழியுடனும் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து இந்திய மொழிகளையும் ஏற்றுக் கொண்டால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மேலும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை 10 இந்திய மொழிகளில் கற்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்தியை எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், ““ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாகஇருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;” என்று அமித்ஷா பேசியுள்ளார்.

இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது

இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை