4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதி கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கூறுகையில்,‘‘இந்தியாவின் சட்டப்படி 4 பேரையும் அந்நாடு விசாரிக்கும். அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்களா அல்லது இலங்கையில் இருக்கும்போது எந்த தீவிரவாத அமைப்புக்காவது உதவி செய்தார்களா என்பது குறித்து இலங்கை விசாரிக்கும்” என்றார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை