‘இந்தியா’வின் எதிரி பாஜ: கம்யூ. எம்பி அட்டாக்

மதுரை: மதுரையில் எம்பி சு.வெங்கடேசன், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கூட்டமைப்பான ‘இந்தியா’ ஊழல்வாதிகள் நிறைந்தது என பிரதமர் மோடி கூறுவது அவரின் பயத்தை காட்டுகிறது. அந்த பயத்தை நான் ரசிக்கிறேன். மோடிக்கு இந்தியர்கள் தான் எதிரிகள். ஏனென்றால், மோடி இந்தியாவின் எதிரி. இந்திய ஒற்றுமையின் எதிரி. இந்திய பன்மைத்துவத்தின் எதிரி பாஜ. இந்திய மதச்சார்பின்மையின் எதிரி இந்துத்துவா. இந்தியாவை கண்டு மோடி அலறுவதையும், பயப்படுவதையும் நாங்கள் ரசிக்கிறோம்’’ என்றார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்