இந்தியாவின் ‘ட்ரோன் சகோதரிகள்’ திட்டம்… வேளாண் துறையில் ஆளில்லா விமானங்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி!!

இந்திய வேளாண் துறையில் பயிா் மதிப்பீடு, பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பயிா்களுக்கான ஊட்டச்சத்துக்களை தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்கள்) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.அதன்படி கடந்தாண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், ‘வேளாண் துறையில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் அதிக மகசூலுடன் செலவைக் குறைக்க, நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டின் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சியை மத்திய அரசு வழங்கும்’ என்று கூறியிருந்தாா். இதற்காக ரூ.1,261 கோடி செலவில் ‘நமோ ட்ரோன் சகோதரிகள்’ திட்டமும் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் 15,000 ஆளில்லா விமானங்கள் வழங்கப்படும். ஆளில்லா விமானங்கள் மற்றும் அதன் தொடா்புடைய பாகங்கள் அல்லது துணை கட்டணங்களின் செலவில் 80 சதவீதம் (அதிகபட்சம் ரூ.8 லட்சம்) வரையில் மத்திய அரசு நிதியுதவியும் கடன்களும் வழங்கும்.ஆளில்லா விமானகளை வழங்குவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களில் ஒரு தகுதி வாய்ந்த உறுப்பினருக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

Related posts

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!

எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!

இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னும் கரையொதுங்கும் 50 லட்சம் லெகோ பொம்மைகள்..!!