இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்: காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உறுதி

பதன்: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வடக்கு குஜராத்தின் பதன் நகரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: பாஜவும், ஆர்எஸ்எஸ்சும், ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட பின்னர் அரசியலமைப்பை மாற்ற திட்டமிட்டுள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களை உள்ளடக்கியது.

ஆனால் கார்ப்பரேட், மீடியா, தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு அதிகாரிகளில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை பார்க்க முடியாது. ஒன்றிய அரசின் தலைமை பொறுப்பில் உள் 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு முக்கியமற்ற பதவிகள் தரப்படுகின்றது. நாட்டில் 70 சதவீதத்துக்கு இணையான சொத்துக்கள் வெறும் 22 பேரிடம் மட்டுமே உள்ளது. தலித், ஓபிசி, பழங்குடியினர் மற்றும் பொது பிரிவினரின் சரியான மக்கள் தொகையை கண்டறிவதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதலில் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவது தான் தீர்வாகும் ” என்றார்.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்