இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டாலும் சர்வாதிகாரமும், மதவெறி அரசியலும் வீழ்த்தப்பட்டிருக்கிறது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடந்த மக்களவை தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டியிருக்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் பொது தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவு காப்பாற்றப்பட்டிருக்கிறது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டாலும் சர்வாதிகாரமும், மதவெறி அரசியலும் வீழ்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்வது தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இந்த பின்னணியில் நமது எதிர்கால அரசியலை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்வோம்.

Related posts

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்