ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா

புதுடெல்லி: இந்திய ராணுவத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ரூ.39,125கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு துறை செயலர் கிரிதர் அரமனே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள், ரேடார்கள், ஆயுத அமைப்புக்கள் மற்றும் மிக்-29 ஜெட் விமானங்களுக்கு ஏரோ என்ஜின்கள் வாங்குவது உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது