ஆயுத தொழிற்சாலைகளில் அப்ரன்டிஸ் : 40 இடங்கள்

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலைகளில் டிப்ளமோ/பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி: 1
Graduate Apprentice

பாடவாரியாக காலியிடங்கள் விவரம்: Mechanical-4, Electrical-1, Civil-1, Science-20, Commerce-10, Computer Appliection-10.
உதவித் தொகை: மாதம் ரூ.9 ஆயிரம்.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம். படிப்பை முடித்து 2 வருடங்களுக்கு மேலாகியிருக்கக் கூடாது.

2. Technical Apprentice: 30 இடங்கள்.
பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: Mechanical-26, Electrical-2, Civil-2. உதவித் தொகை: ரூ.8,000/-. சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். படிப்பை முடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கக் கூடாது. பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். www.munitionsindia.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2023.

Related posts

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி

செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு குளிர்பானம் அருந்தியது காரணமல்ல என்று அறிக்கையில் தகவல்

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு : மருத்துவர்கள் நாளை மாலைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு!!