இந்திய விலங்குகளும் ஓடும் வேகமும்!

இந்தியாவில் வாழும் விலங்கினங்களில் அதிவேகமாக ஓடும் விலங்கினங்
களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பிளாக்பக் ஆண்டிலோப் என்பது மான் இனத்தின் ஒரு வகையாகும். இந்தியாவின் மிக வேகமாக ஓடும் வனவிலங்கான இது மணிக்கு 80 கிமீ வேகத்தைத் தாண்டும். குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் திறந்த சமவெளி மற்றும் புல்வெளிக் காடுகளில் வாழ்கின்றன.ஆசிய சிங்கம் அல்லது இந்திய சிங்கம் அல்லது பாரசீக சிங்கம் என அழைக்கப்படுவது சிங்கங்களில் ஒரு கிளையினம் ஆகும். சிங்கம் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஓடுகிறது. குஜராத்தின் வறண்ட காடுகள் மற்றும் இந்தியாவில் கிர் தேசியப் பூங்காவில் அதிக அளவு இந்தியச் சிங்கங்கள் வாழ்கின்றன.வங்காளப் புலி அல்லது இராயல் பெங்கால் புலி (Panthera tigris tigris) புலியினத்தில் ஒரு சிற்றினம் ஆகும். இப்புலிகள் இந்தியா, பாக்கிஸ்தான், வங்காளதேசம்,நேப்பாளம், பூட்டான், மியன்மார் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கறுப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. எனினும் வெள்ளைப்புலிகளும் உண்டு. வங்காளப் புலி, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய விலங்காக உள்ளது. இந்தியக் காடுகளில் வசிக்கக்கூடிய இந்த புலி மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. காட்டுப் பூனை இனத்தில் புலிகளும் அடங்கும்.

வரிக்குதிரையின் தனித்தன்மை!

வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு. குதிரை இனத்தைச் சேர்ந்த இது ஒரு தாவர உண்ணி. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒறு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளதாலேயே தமிழில் வரிக்குதிரை எனப்படுகின்றது. வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றின் வரியைப்போல் இருப்பதில்லை. உதாரணமாக மனிதர்களின் கைவிரல் ரேகைகள் ஒருவருக்கு இருப்பது போல் மற்றொருவருக்கு இருப்பதில்லை. இதேபோன்றதுதான் வரிக்குதிரையின் வரிகள். தனித்தன்மையான கறுப்பு, வெள்ளை வரிக்கோடுகள் குதிரையின் முன்புறம் முகத்தில் நெடுக்குக் கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.

 

Related posts

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.