இந்தியா கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்புகள் பேரணி: நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் நடத்திய நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாணவர் சங்க அமைப்புகளின் தலைவர்கள் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தேசிய தேர்வு முகமைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கும் நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான நாளை (இன்று) நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Related posts

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் கைது வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஜாபர் சாதிக் மனு: இன்று விசாரணை