நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்: பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம்

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2019ல் ஒன்றிய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக தனது 7வது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டி எழுந்துள்ளது. குற்றிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ என பல கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படாததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடும் இல்லை, திருக்குறளும் இல்லை” என்ற பதாகையுடன் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே?” என கேள்வி எழுப்பி திமுக கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி