மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு 2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி முடிவு செய்யும்: ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி : 2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என காங்கிரஸ் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கும். பெருபான்மை என்றால் 272-க்கு கூடுதலாக அதாவது 273 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இந்தியா கூட்டணி தெளிவான பெருபான்மை பெறும் என்றால் 273-க்கு அதிகமாக இடங்களில் வெற்றி பெறும் என்று பொருள். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான 48 மணி நேரத்திற்குள் பிரதமரை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும்.

பிரதமரை தேர்ந்தெடுக்க 48 மணி நேரம் கூட ஆகாது. 2004 தேர்தலுக்கு பிறகு, மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க 3 நாட்கள் கூட ஆகவில்லை. பிரதமர் பதவியை சோனியா காந்தி நிராகரித்தவுடனேயே மன்மோகன் சிங் தான் அவரது தேர்வு என்பது வெளியாகி விட்டது. எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அக்கட்சியை சேர்ந்தவர் பிரதமராவார். மக்களவை தேர்தலில் 2 கட்டங்கள் முடிந்ததுமே காற்று மாறி வீசுவது தமக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. தென்னாட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படப் போகிறது.

வட இந்தியாவில் அதன் பலம் பாதியாக குறைக்கப்பட உள்ளது. 2004-ல் பெற்றதை போன்றே தெளிவான பெரும்பான்மையை தற்போது இந்தியா கூட்டணி பெறப்போகிறது என்பதில் ஐயம் இல்லை. ஜூன் 1-ம் தேதி வெளியிடப்படும் வாக்குப்பதிவு கணிப்புகள், செயற்கையாக இட்டுக்கட்டி வெளியிடப்படக் கூடும் என்றும் கூறினார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி