நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது :இண்டியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

டெல்லி : தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவர் புகைப்படத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய ராகுல் காந்தி, “தமிழ்நாட்டின் சிறந்த தலைவர், தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாசாரத்தை பாதுகாக்க போராடிய கலைஞருக்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இண்டியா கூட்டணி தலைவர்கள் கலைஞருக்கு புகழாரம் சூட்டினர். அவர் பின்வருமாறு..

சோனியா காந்தி : கலைஞர் பிறந்தநாளை ஒட்டி, திமுக தோழர்களுடன் அவருக்கு மரியாதை செலுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை பலமுறை சந்தித்தது, அவரின் உரையை கேட்டது, அவரின் ஞானத்தின் வழியே கிடைத்த அறிவுரைகள் ஆகியவற்றை பாக்கியமாக கருதுகிறேன். கலைஞரின் ஆலோசனைகளை கேட்டு, அதன் மூலம் பயன் அடைந்துள்ளோம். கருத்துக்கணிப்புகளுக்கு எதிராகவே தேர்தல் முடிவுகள் அமையும். தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பாருங்கள்.

பரூக் அப்துல்லா : தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபட்டவர் கலைஞர். நெருக்கடியான நேரத்தில் உறுதுணையாக இருந்தவர் கலைஞர்.

டி.ராஜா : கலைஞரின் தமிழால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர், சமூக நீதியை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. இந்தியாவின் நெருக்கடியான காலகட்டத்தில் கலைஞருடன் இணைத்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சீதாராம் யெச்சூரி : இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் தலைவர் கலைஞர்.செம்மொழி மாநாட்டுக்கு தனக்காக கலைஞர் ஹெலிகாப்டரை அனுப்பி அழைத்துச் சென்றதை நினைவுகூர்ந்தார். இந்தியாவின் பெருமை மிகு மகன்களில் ஒருவர் கலைஞர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு