இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்: முதல்வர் மம்தா பானர்ஜி சூசகம்

கொல்கத்தா: இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘நாட்டிற்கு மாற்றம் தேவை. நாடு மாற்றத்தை விரும்புகின்றது. இந்த ஆணை மாற்றத்திற்காக வழங்கப்பட்டது. நாங்கள் காத்திருக்கிறோம் மற்றும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மக்கள் வழங்கிய இந்த ஆணை நரேந்திரமோடிக்கு எதிரானது.

எனவே அவர் இந்த முறை பிரதமராக வரக்கூடாது. ஜனநாயக விரோதமாகவும், சட்டவிரோதமாகவும் பாஜ ஆட்சி அமைக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்று உரிமை கோரவில்லை என்றால் நாளை உரிமை கோராது என்று அர்த்தமல்ல. கொஞ்சம் பொறுத்திருப்போம். மத்தியில் இந்த நிலையற்ற மற்றும் பலவீனமான அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியே சென்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு