இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு: இலங்கையில் நலிவடைந்துள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு உடனடியாக இலவச சுற்றுலா விசா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னோடி திட்டமாக அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!