இந்தியாவிலேயே இளம் வாக்காளர்கள் கேரளாவில்தான் அதிகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3 மாதத்தில் மட்டும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே அதிகமாகும்.

கேரளாவில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் கேரளாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 18 வயதுக்கும் 19 வயதுக்கு இடையே உள்ள இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 77,176 ஆக இருந்தது.

கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,533ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை உள்ள கணக்கின்படி இளம் வாக்காளர் எண்ணிக்கை 3,88,981 ஆக உயர்ந்து உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 3 மாதங்களுக்குள் 3,11,805 இளம் வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும். இவர்கள் அனைவரும் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு