இந்தியாவில் 76% தொழிலாளர்கள் மன அழுத்தம் பிரச்சனையால் பாதிப்பு: சர்வதேச அளவில் புள்ளி விவரம் வெளியீடு

சென்னை: இந்தியாவில் மன அழுத்தம் காரணமாக 76% தொழிலாளர்கள் தங்களது செயல்திறனில் எதிர்மறைவான விளைவை சந்திப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மன அழுத்தம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான ஒன்று. மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் என்பது பல காரணங்களால் ஏற்படும். சுற்றுப்புறத்தில் இருந்து வரலாம், நம் உடலில் இருந்தே வரலாம், நம் சிந்தனையில் இருந்து மன அழுத்தம் வரலாம்.

இது தொடர்பாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் 49% இந்தியர்கள் மன அழுத்த பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 65% தொழிலாளர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-ல் 6 இந்தியர்கள் மன அழுத்தம் தொடர்பாக மேலாளர்களிடம் உரையாடுவது இல்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்