இந்தியாவில் இருந்து தாய்லாந்து கொண்டு செல்லப்பட்ட புத்த மத புனித நூல்களை ஒரு லட்சம் பேர் பார்த்தனர்

பாங்காக்: தாய்லாந்தில் கண்காட்சியில் வைக்கப்பட்ட புத்த மத புனித நூல்களை ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களான அரஹத சாரிபுத்ரா மற்றும் அரஹத மௌத்கல்யாயனா ஆகியோரின் பிப்ரஹ்வா புனித நூல்கள் 26 நாள் கண்காட்சிக்காக தாய்லாந்த் தலைநகர் பாங்காக்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிமு 4ம் நுாற்றாண்டை சேர்ந்த இந்த நுால்கள் கடந்த 1970ம் ஆண்டு கபிலவஸ்துவில் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்தன.கடந்த 22ம் தேதி தாய்லாந்தில் மக்கா புச்சா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த கண்காட்சியில் வைப்பதற்கு புனித நூல்கள் கடந்த 22ம் தேதி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பீகார் ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவ்சினிடம் புனித நூல்களை ஒப்படைத்தனர்.

ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார்,புத்த துறவிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். மக்கா புச்சா தினத்தன்று பாங்காக்கில் உள்ள சனம் லுவாங் மண்டபத்தில் வைக்கப்பட்ட புனித நூல்களை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர். கண்காட்சி பயணத் திட்டத்தில் தாய்லாந்து முழுவதும் உள்ள பல இடங்களுக்குச் சென்று, பக்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த மதிப்பிற்குரிய கலைப்பொருட்களுக்கு மரியாதை செலுத்த அனுமதிப்படுவார்கள். வரும் மார்ச் 14ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என்று ஒன்றிய கலாசார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு