2023ம் ஆண்டில் இந்தியாவிலேயே 70 இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து தமிழ்நாடு முதலிடம்..!!

டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் 70 இதய மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 35, மராட்டியம் 33, குஜராத்தில் 29, தெலுங்கானாவில் 15 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாடு, அதிக இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது மிக முக்கியமான சாதனை. இதய மாற்று அறுவை சிகிச்சை, மிகுந்த சிக்கலான மற்றும் நுட்பமான ஒரு அறுவை சிகிச்சையாகும். இதனை வெற்றிகரமாகச் செய்வதில் தமிழக மருத்துவர்கள் முன்னேறியுள்ளனர். இதனால், தமிழக மருத்துவமனைகள் இதய மாற்று அறுவை சிகிச்சையில் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திறனுடன் உள்ளன.

இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர். இதய மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம், அதை பெறுவதன் சிக்கல்தன்மை, மேலும் இதற்கு தேவையான பராமரிப்பு முறைகள் குறித்து மக்கள் தகுந்தவாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதற்கான மருத்துவ வசதிகளை தமிழக அரசு மேலும் மேம்படுத்தி வருகிறது. மருத்துவ நுட்பங்களின் மேம்பாடும், மருத்துவர்களின் திறமையும், தமிழ்நாட்டை இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதலிட மாநிலமாக மாற்றியுள்ளது.

Related posts

தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்

கலசபாக்கம் அருகே டயர் வெடித்ததில் கார் மீது அரசு பஸ் மோதி பெண் உட்பட 2 பேர் நசுங்கி பலி

ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!