32.72 சதவீத பங்குகளை வாங்கி இந்தியா சிமென்ட்சை கைப்பற்றியது அல்ட்ராடெக்

புதுடெல்லி: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு பங்கிற்கு ரூ.268 என்ற விலையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 22.77 சதவீத பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளர்களிடம் இருந்து 32.72 சதவீத பங்குகளை ரூ.3,954 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதன் மூலம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அல்ட்ராடெக் கைப்பற்றும். சமீபத்தில், நாட்டின் 2வது பெரிய சிமென்ட் தயாரிப்பாளரான அதானி குழுமம் ரூ.1,0422 கோடியில் ஐதராபாத்தின் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய நிலையில், தற்போது அல்ட்ராடெக், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது. இதுதவிர, அல்ட்ராடெக் தனது பங்குதாரர்களிடமிருந்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலும் 26 சதவீத பங்கை ரூ.3,142.35 கோடியில் பெறுவதற்கான சலுகை விலை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி 2 பக்தர்கள் பலி ; 3 பேரை தேடும் பணி தீவிரம்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்