இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக

சென்னை: இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என திராவிட முன்னேற்றக்கழகம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவுக்கு எதிராக கட்டமைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக இணைந்து செயல்படுவதற்கும் ஊக்கம் தந்து உறுதுணையாக விளங்கியவர். தேர்தல் பணி தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே மக்களவை தொகுதி வாரியாக பாக முகவர் கூட்டத்தை நடத்தியவர் என பெருமிதம் தெரிவித்துள்ளது.

Related posts

நான் முதல்வன் திட்டம்: பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம்