எண்ணிக்கை 65 ஆக உயர்வு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள்

 

சென்னை: வழக்கறிஞர்களாக உள்ள செந்தில் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது, 63 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர். இருவரும் அடுத்த வாரம் நீதிபதிகளாக பதவியேற்கின்றனர். இதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது. இன்னும் 10 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி