நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரையில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்


பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுல பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு, அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக நேற்று முதலே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Related posts

சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்