வருவாய் கொடுக்கும் வெண்பன்றி வளர்ப்பு!

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற பல மாநிலங்களில் இன்றைக்கு வெண்பன்றியின் தேவை அதிகரித்து இருக்கிறது. ஆனால் வெண்பன்றிகளின் உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வெண்பன்றிகளை வளர்ப்பது குறித்த தயக்கம்தான். சிலர் பன்றி வளர்க்கலாமா? என யோசிக்கிறார்கள். மற்ற கால்நடை வளர்ப்பு போலத்தான் பன்றி வளர்ப்பும். இதில் பராமரிப்பு எளிதாக இருக்கும். லாபம் கிடைப்பது உறுதி என்றே சொல்லலாம். வெண்பன்றி வளர்ப்பில் ஈடுபட விரும்பும் தொழில்முனைவோருக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும். முதலில் பன்றிப் பண்ணையை துவங்குவதற்கு 25 பெண் குட்டிகள், 3 ஆண் குட்டிகள் இருந்தாலே போதும். 25 நாட்கள் ஆன பன்றிகளில் 10 கிலோவுக்கு அதிக எடையுள்ள வெண்பன்றி குட்டிகளை வாங்க வேண்டும். வெண்பன்றிகளுக்கு அமைக்கும் கொட்டகையை தரையில் இருந்து 3 அடி உயரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து 10 அடி உயரத்திற்கு ஆஸ்பெட்டாஸ் சீட் போடலாம். வேறு கூரைகளையும் அமைக்கலாம். ஸ்டீல் ஷீட் போட்டால் அதிக சூடு உள்ளே வரும் என்பதால் இதனைத் தவிர்ப்பது நல்லது.

வெண்பன்றிகளைப் பொருத்த வரையில் 9 அல்லது 10வது மாதத்தில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இந்த நேரத்தில் பன்றிகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் சிறிது நாள் கழித்து இனப்பெருக்கத்திற்கு விடுவது நல்லது. சினை பிடித்த பன்றிகளை தனித்தனி ஷெட்டில் வைத்து வளர்த்து வருகிறோம். ஒரே ஷெட்டில் சினை பிடித்த பன்றிகளை வைத்து வளர்த்தால் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொள்ளும். இதனால் வயிற்றில் குட்டிகள் தங்காமல் போகக்கூடும். இனப்பெருக்கம் நடைபெற்ற நாளில் இருந்து 113 அல்லது 114வது நாளில் தாய்ப் பன்றிகள் குட்டி ஈனும். இதன்மூலம் வருடத்திற்கு 20 வெண்பன்றி குட்டிகள் கிடைக்கும். தாய்ப் பன்றிகள் குட்டி ஈன்ற அடுத்த 30வது நாளிலேயே மீண்டும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். 3 மாதங்கள் கழித்து இனப்பெருக்கம் செய்தால் ஆரோக்கியமான குட்டிகளைப் பெறலாம்.இனப்பெருக்கப் பன்றி வளர்ப்புப் பண்ணையில் உள்ள குட்டிகளுக்கு கண்டிப்பாக அடர் தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இறைச்சிக்கான பன்றி எனில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், மாணவர் விடுதிகளில் கிடைக்கும் உணவுக் கழிவுகள், இலைகளை சேகரித்து கொடுக்கலாம். பண்ணையிலிருந்து 15 கி.மீ. சுற்றளவுக்குள் அவ்வாறு தினமும் உணவுக் கழிவுகள் நிச்சயம் கிடைக்கும் என்றால் மட்டுமே இறைச்சிக்கான பன்றிப் பண்ணையில் லாபம் ஈட்ட முடியும்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு