வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: கர்நாடகாவில் 60 இடங்களில் இன்று லோக் ஆயுக்தா போலீசார் சோதனை

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கர்நாடகாவில் 60 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடகாவில் 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.

பெங்களூரு, பெங்களூரு ஊரகம், சிமோகா, யாதகிரி, தும்கூர், ஆகிய இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையை இன்று அதிகாலை முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து வரும் அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று லோக் ஆயுக்தா போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related posts

கூடுதல் விலைக்கு மது விற்பனையை தடுக்க 12,000 பில்லிங் மெஷின்கள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு டாக்டர் போக்சோவில் கைது: பள்ளி தலைமை ஆசிரியையான தாயும் சிக்கினார்

மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு