தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

பூந்தமல்லி: தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீரென நேரில் ஆய்வு செய்தார். சென்னை, புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 19.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2530 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து 1649 கன அடியாக உயர்ந்துள்ளது. இதில் 225 அடி, கன அடி நீர் கிருஷ்ணா நதிநீர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 1649 கன அடியாக தண்ணீர் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏரியின் நீர் மட்டம் கணிசமாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் வரை ஏரியில் 20 அடி உயரம் தண்ணீர் இருந்தது.

இந்நிலையில் தொடந்து 3 நாட்களாக பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்து வருவதை, நேற்று பிற்பகல் கலெக்டர் கலைச்செல்வி மோகன் திடீரென வருகை தந்து ஏரியை பார்வையிட்டு, ஏரியின் மதகுகள் மற்றும் நீர்வரத்து கால்வாய், உபரிநீர் வெளியேறும் கால்வாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், 24 மணி நேரமும் ஏரியை கண்காணித்து வருகின்றனர். மேலும், ஏரியின் முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது